தமிழ்நாடு

விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை : வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறும்!

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் புது முயற்சி வெற்றி பெற்று உணவு உற்பத்தியில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை : வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:

‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு’என்ற பிரசார முழக்கத்துடன் தமிழக தேர்தல் களத்தில் இறங்கிய தி.மு.க, வெற்றி பெற்று வாகை சூடியது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பணியில் அமர்ந்த கையோடு அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இருண்டு போன தமிழகம் விடியலை காண துவங்கியுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.கவுக்கு நிகர் வேறு எந்த கட்சியும் இல்லை என்பது வரலாறு.

கடந்த மே மாதம் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம், பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் கையெழுத்து போட்டார். தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக நிறைவேற்ற உள்ள வாக்குறுதி மிக முக்கியமானது.

இந்த ஆண்டு வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த நிதியாண்டுக்கான, பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் என்ற அறிவிப்பு

விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை : வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறும்!

விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. விவசாயம் தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் 35 சதவிகித ஜி.டி.பி விவசாயத்திலிருந்துதான் வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு கட்டுப்படியான வருமானம் இல்லை. அவர்களின் வாழ்வை மேம்படுத்த, தனி பட்ஜெட் அவசியம். இது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அ.தி.மு.க அரசு அனைத்தையும் நிராகரித்து வந்தது.

இப்போது, தி.மு.க ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் நலன் காக்க வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், சாகுபடி பரப்பளவு உயரும். விளை பொருள்களுக்கான சந்தை வசதி முறைப்படுத்தப்படும். மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும். பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்துவதற்கான தனி திட்டங்கள் வகுக்கப்படும்.

வேளாண்மை தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஹெக்டேர் நிலம் விளை நிலமாக உள்ளது. தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு, விளை நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் புது முயற்சி வெற்றி பெற்று உணவு உற்பத்தியில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

banner

Related Stories

Related Stories