தமிழ்நாடு

“விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் நீங்கள்..” : எச்.ராஜாவை கடுமையாக சாடிய நிதியமைச்சர் பி.டி.ஆர் !

சிவகங்கை விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எச்.ராஜா. இதுமாதிரி நிறைய பேர் உள்ளனர் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் நீங்கள்..” : எச்.ராஜாவை கடுமையாக சாடிய நிதியமைச்சர் பி.டி.ஆர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எச்.ராஜாவை கடுமையாக சாடியுள்ளார். அப்போது பேசிய அமைச்ச, சிவகங்கையில் ஆண்டுதோறும் தண்ணீர் இல்லை என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தி.மு.க ஆட்சியில் அத்தகைய நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அனைவருக்கும் நீர் கிடைக்க வழிவகைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தலில் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் தோல்வியை சந்தித்த எச்.ராஜா வேண்டும் என்றே பொய்யான குற்றச்சாட்டை கூறுவருகிறார். இதுவரை இல்லாத வகையில் சிவகங்கையில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால், அவர் வெளியிடும் அறிக்கையில், நிதியமைச்சராக உள்ள பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், விவசாயிகளை திருடர்கள் என்று கூறியதாக கூறி, தன்னை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று கூறுகிறார்.

தேனியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விவசாயிகளுக்கு செல்லவேண்டிய தண்ணீர் மற்றும் மின்சாரத்தை திருட்டுதனமாக எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசாமல், பிரச்சனையை திசை திருப்ப எச்.ராஜா தன்னை பற்றி பேசுகிறார். சாப்பாடு போடும் விவிசாயிகளுக்கு, குறிப்பாக சிவகங்கை விவசாயிகளுக்கு துரோகம் செய்வர் எச்.ராஜா. இதுமாதிரி நிறைய பேர் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories