தமிழ்நாடு

ரேசன் பொருட்கள் இல்லாமல் பரிதவித்த மூதாட்டி; உரிமையை பெற்றுத்தந்த DMK MLA; திருப்பூரில் நடந்த நெகிழ்ச்சி!

ரேசன் பொருட்கள் இல்லாமல் பரிதவித்த மூதாட்டி; உரிமையை பெற்றுத்தந்த DMK MLA; திருப்பூரில் நடந்த நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் பகுதியில் ஆய்வுப் பணிக்காக சென்றுக்கொண்டிருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜின் காரை நிறுத்தி மூதாட்டி ஒருவர் தன் குறைகளை கூறி முறையிட்டார்.

அதில், வெடத்தலாங்காடு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்க வருவோரிடம் வாய்க்கு வந்தபடி ஊழியர் ஒருவர் பேசியது குறித்து அந்த மூதாட்டி குற்றம் சாட்டினார்.

அந்த மூதாட்டியின் புகாரை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் உங்களுடைய குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துச் சென்றார். பின், ஆய்வுப் பணியை முடித்து மூதாட்டி இருக்கும் பகுதிக்கு மீண்டும் சென்ற க.செல்வராஜ் எம்.எல்.ஏ அந்த மூதாட்டியை கையோடு தன் காரிலேயே அழைத்து ரேசன் கடைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு பொது மக்களை இழிவாக நடத்திய ரேசன் கடை ஊழியரை எச்சரித்ததோடு முறையாக அவர்களுக்கான பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு மூதாட்டிக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இது போன்று மீண்டும் எந்த புகாரும் எழக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினரின் அதிரடி நடவடிக்கையை கண்டு ஆச்சர்யத்தில் அந்த மூதாட்டி கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories