தமிழ்நாடு

₹6.50 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: சினிமா பாணியில் கண்டெய்னர் லாரி கடத்தல் - மர்மகும்பல் துணிகரம்!

பெங்களூரில் சினிமாவை மிஞ்சும் வகையில் சுமார் ரூ. 6.50 கோடியிலான மொபைல் போன்களை கொள்ளையிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

₹6.50 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: சினிமா பாணியில் கண்டெய்னர் லாரி கடத்தல் - மர்மகும்பல் துணிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெங்களூரில் உள்ள ஸ்ரீஜி டிரான்ஸ்போர்ட்டின் ஒரு கண்டெய்னர் லாரி, நேற்று மாலை 3 மணியளவில் சென்னையில் ரூ.6.39 கோடி மதிப்புள்ள எம்.ஐ. நிறுவனத்தின் மொபைல்கள் கொண்டுச் சென்றனர். கன்டைனர் லாரி டிரைவர் சுரேஷ் நேற்று இரவு 9.30 மணியளவில் கர்நாடக மாநில எல்லையை வந்தடைந்துள்ளார். மாநில எல்லையில் உள்ள நங்கவள்ளி டோல்கேட் அருகில் உள்ள ஆகிலும் மாவட்டத்தின் தேவராயன் சமுத்திரம் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மொபைல் போன்களை ஏற்றி வந்த லாரியை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், லாரியை வழிமறித்து. அதன்பிறகு காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் லாரி டிரைவர் சுரேஷ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரை அடித்து உதைத்து கை, கால்களை கட்டியும், வாயில் துணி வைத்து அடைத்துவிட்டு அங்கேயே விட்டு விட்டு, கண்டெய்னர் லாரியை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் அதில் இருந்த 6.39 கோடி மதிப்பிலான மொபைல் போன்களை மற்றொரு வாகனத்துக்கு மாற்றிவிட்டு, அதன்பிறகு அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கோலார் மாவட்டம் நேர்னஹள்ளி அருகே லாரியை நிற்க்க வைத்துவிட்டு சென்றுள்ளனர். இரவு முழுவதும் ஆட்கள் இல்லாத இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டயிருந்த டிரைவர் சுரேஷ், காலை 9.30 மணியளவில் நெடுஞ்சாலையை நெருங்கி உள்ளூர் மக்களிடம் உதவி பெற்று முளுபாகிலு கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

₹6.50 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: சினிமா பாணியில் கண்டெய்னர் லாரி கடத்தல் - மர்மகும்பல் துணிகரம்!

நடந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் கொள்ளை போனது தெரிய வருவதால், போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைரேகை நிபுனார்கள் மற்றும் கோலார் எஸ்.பி கிஷோர் பாபு குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து, தடயம் ஏதேனும் உள்ளதா என சோதனை ஈடுபட்டனர். டிரைவர் சுரேஷ் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் இது ஒரு ப்ரீப்ளான் கொள்ளை என தெரியவந்தது.

ஒரு மொபைல் நிறுவனத்தின் கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் இது போன்று அடிக்கடி கொள்ளை போவது போலிஸாருக்கு சந்தேகம் ஏற்படுத்திள்ளது. மேலும் மொபைல் கம்பெனியின் உள்ளே யாரோ ஒரு சிலர் இந்த கொள்ளை கும்பலுக்கு உதவி செய்திருக்கலாம் என சந்தேகம் வலுவாக உள்ளது என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள எம்.ஐ நிறுவனத்தின் மொபைல் போன்கள் இதுபோன்ற தொடர் இடைவேளையில் கொள்ளை போகும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories