தமிழ்நாடு

அண்ணாமலையின் போராட்டம் ஒரு நாடகம்; பிரிவினையை தூண்டும் பாஜகவின் கனவு நிறைவேறாது - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் என்கிற பெயரில் விவசாயிகள், அரசியல் கட்சியினரை வசைபாடியுள்ளதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கடும் கண்டனம்.

அண்ணாமலையின் போராட்டம் ஒரு நாடகம்; பிரிவினையை தூண்டும் பாஜகவின் கனவு நிறைவேறாது - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது.

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் பா.ஜ.க நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது போலி நாடகம். இதன் காரணமாக கர்நாடக விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியுள்ளது.

மேகதாது பிரச்சனையில் விவசாயிகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் பிரிவினையை தூண்ட நினைக்கும் தமிழக பாஜகவின் கனவு நிறைவேறாது. நிச்சயம் மண்ணை கவ்வுவார்கள்.

தஞ்சை உண்ணாவிரதம் போலி நாடகம் , மேகதாதுவில் அணைகட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஒன்றிய அரசு அனுமதி அளித்த நிலையில், பிரதமரை கண்டித்து போராட்டம் நடத்தாமல் கர்நாடக அரசை கண்டிப்பது தேவையற்றது.

தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் என்பது அரசியல் முதிற்சியற்றது.

banner

Related Stories

Related Stories