தமிழ்நாடு

“மோசடி செஞ்சாதான் பா.ஜ.கவில் இடம்?” : மோசடி மன்னன் எல்ஃபின் ராஜா மீது தொடர்ந்து குவியும் புகார்கள்!

பா.ஜ.க பிரமுகர் நடத்தும் எல்ஃபின் நிதி நிறுவனம் மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

“மோசடி செஞ்சாதான் பா.ஜ.கவில் இடம்?” : மோசடி மன்னன் எல்ஃபின் ராஜா மீது தொடர்ந்து குவியும் புகார்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்சியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் நடத்தும் எல்ஃபின் நிதி நிறுவனம் மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த மே மாதம் புகார் அளித்தார். அவரது புகாரில், 'எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ரூ. 72 லட்சம் முதலீடு செய்தேன்.

நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ரூ. 2 கோடியே 18 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதை ரூ. 4 கோடியே 68 லட்சமாகத் தருவோம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள். ஆனால் அதை வங்கியில் செலுத்தச் சென்றபோது, கணக்கில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைக்கழித்து, திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்டபோது, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மிதுன் சமேஷ் கொடுத்த புகாரின் பேரில், எல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா, அவரது தம்பி ரமேஷ், நிர்வாகிகள் இளங்கோவன், பால்ராஜ், சாகுல் ஹமீது, அறிவுமணி, பாபு, மதிவாணன், ராஜப்பா, பாதுர்ஷா உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் கோசல்ராமன் தலைமையிலான தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்ஃபின் நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஏற்கனவே சிவகாசி ஜெயலட்சுமி கடந்த ஜூன் மாதம், திருச்சி வந்து 3 நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

எல்ஃபின் ராஜா பா.ஜ.க-வில் பொறுப்பு வகிக்கிறார். இவர்கள் மீது விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் மோசடி மற்றும் மிரட்டல் புகார்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories