தமிழ்நாடு

’விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; அதுதான் ஸ்டாலின்’ : கான்வாயை நிறுத்தி சொன்ன பெண் -சிரித்தபடி சென்ற முதல்வர்

கான்வாயில் செல்லும்போது பெண் ஒருவர் முகத்தைப் பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால் முகக்கவசத்தை அகற்றிப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

’விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; அதுதான் ஸ்டாலின்’ : கான்வாயை நிறுத்தி சொன்ன பெண் -சிரித்தபடி சென்ற முதல்வர்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கத்தினை செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய் காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும். முகக் கவசத்தை அகற்றச் சொல்லி என வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து காரை நிறுத்தச் சொல்லி பெண்மணியிடம் பேசிய முதலமைச்சரிடம் மாஸ்கை அகற்றி சில விநாடிகள் பேசிவிட்டுச் சென்றார்.

அப்போது அப்பெண் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. அதுக்கு பெயர் ஸ்டாலின் எனக் கூறி பூரிப்படைந்தார். இது தொடர்பான காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories