தமிழ்நாடு

“உன்னை சீரழித்துவிடுவேன்” : 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அ.தி.மு.க பிரமுகர் போக்சோவில் கைது!

குடியாத்தத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த அ.தி.மு.க பிரமுகரை போலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“உன்னை சீரழித்துவிடுவேன்” : 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அ.தி.மு.க பிரமுகர் போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 12ஆம் வகுப்பு படிக்கும் எனது மகள் (வயது 16) என்பவரை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப துணைதலைவர் கௌதம் என்பவர் தகாத முறையில் அணுக முயற்சிப்பதும், தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவதும், தேவையற்ற பாலியல் தொல்லைகள் கொடுப்பதும், எனது மகளின் புகைப்படத்தை முகநூலில் தவறாக இணைந்து ஆபாச செய்திகளை வெளியிட்டுள்ளதும் என்னையும் என் மகளையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

என் மகளுக்கு கௌதம் என்பவர் நான் உமக்கு அண்ணன் போல என கூறி முகநூலில் நட்புக் கொண்டுள்ளார். என் மகள் இந்த நட்பெல்லாம் தேவையில்லை என கூறி மறுத்துள்ளார். ஆனால் மேற்கூறிய கௌதம் என்பவர், என் மகளை தொடர்ந்து காதலிக்க வேண்டும் என்றும் நீ என்னை காதலிக்க மறுத்தால் உன்னை நான் சீரழித்துவிடுவேன் என்றும் போனில் மிரட்டியுள்ளார்.

நீ என்னை காதலிக்கயில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் நான் உன் குடும்பத்தையும் உண்டோடு ஒழித்துகட்டிவிடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை இணைந்து தவறாக செய்தி சித்தரித்து உள்ளார். புகார் மனுவை விசாரித்த குடியாத்தம் அனைத்து மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து கௌதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

“உன்னை சீரழித்துவிடுவேன்” : 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அ.தி.மு.க பிரமுகர் போக்சோவில் கைது!

கௌதம் அ.தி.மு.கவில் நகர தகவல் தொழில் நுட்ப துணைத்தலைவராக இருந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துகொள்ள கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்

banner

Related Stories

Related Stories