தமிழ்நாடு

”OBC இட ஒதுக்கீடு: திமுகவின் முயற்சியும் சென்னை உயர் நீதிமன்றமே காரணம்” - அம்பலப்படுத்திய தி இந்து நாளேடு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விடுபட்டது பாரபட்சமானதாகும்.

”OBC இட ஒதுக்கீடு: திமுகவின் முயற்சியும் சென்னை உயர் நீதிமன்றமே காரணம்” - அம்பலப்படுத்திய தி இந்து நாளேடு
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டிருப்பதற்கு தி.மு.கழகத்தின் முயற்சிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புமே காரணம் என்று "தி இந்து" ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து "தி இந்து" ஆங்கில நாளேடு தனது நேற்றைய (2.8.2021) இதழில் "நீண்ட கால நிலுவை" என்ற தலைப்பிலும், "அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவது, நீண்ட காலமாக இருந்து வந்த பாரபட்சக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது" என்ற துணைத் தலைப்பிலும் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக, மாநிலங்களால் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் (ஏ.ஐ.சி.கி.யு) வழங்குவது என்ற ஒன்றிய அரசின் முடிவு தாமதமான ஒன்றாகும். ஆனால் அது வரவேற்கத்தக்க செயல்பாடாகும். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்குரிய உரிமை மறுக்கப்பட்டு வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைப் பாதுகாக்கும் போது அதனைச் சமநிலைப்படுத்துவதற்கு இணக்கமாக சமூக நிலையில் முன்னேறிய வகுப்பினரையும் சமநிலைப்படுத்துவதில் ஆர்வத்தைக் காட்டும் வண்ணம் ஒன்றிய அரசு பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இது ஏறக்குறைய முற்றிலும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பாலும் அதற்காக தி.மு.கழகம் இந்தக் கோரிக்கைகாக உயர்நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட முயற்சிகளாலும் ஏற்பட்டதாகும். அகில இந்திய அளவிலான ஒதுக்கீடு (ஏ.ஐ.கியூ) என்பது உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவாகும். சில மாநிலங்களில் குடியிருப்புப் பகுதி அல்லது கல்லூரி அமைந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு, அப்பகுதியின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கையில் சில இடங்களை அவர்களுடைய மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்க செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 1986ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் படி, ஏ.ஐ.கி.யூ. எனப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களில் 15 சதவிகிதம் மருத்துவ இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் பல் மருத்துவர் இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 50 சதவிகித இடங்களும், மத்திய தொகுப்பில் மாணவர்ச் சேர்க்கைக்காக, மாநில அரசுகளால் ஒப்படைக்கப்படுகின்றன.

”OBC இட ஒதுக்கீடு: திமுகவின் முயற்சியும் சென்னை உயர் நீதிமன்றமே காரணம்” - அம்பலப்படுத்திய தி இந்து நாளேடு

இந்த அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை. மேலும் கடந்த காலத்தில் ஒரு முறை இந்தப் பிரிவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 2007 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தாழ்த்தப்பட்ட (பட்டியலினத்தவர்) பிரிவினருக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டையும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட (ஏ.ஐ.கியூ) பிரிவில் அனுமதி அளித்தது. இதற்கிடையில், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் சட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு ஒன்றிய கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்தப் பிரிவில் அமல்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நீதிமன்றங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டிற்கு எதிராக வாதாடி வந்தது.

ஆனால், ஒன்றிய அரசு தான் ஒதுக்கீட்டுக்கு எதிராக இல்லை என்று கூறி வந்தது. ஆனால் 50 சதவிகித எல்லைக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறி வந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விடுபட்டது பாரபட்சமானதாகும். ஒன்றிய அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடங்கள் உள்ளன. அதேபோன்று மாநிலங்களால் நடத்தப்படும் கல்லூரிகளில் மாநிலங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகளும் உள்ளன. ஒன்றிய அரசு மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை நாட்டில் மறு விநியோகம் செய்ய உதவுவதற்காக கொடுக்கப்பட்ட இடங்களில் மாநிலங்களை வலியுறுத்தும் நடவடிக்கைக்கு வெளியே நிறுத்துவது பொருத்தமற்றதாகும். அதில் வேறு ஒருவாதமும் உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட (ஏ.ஐ.கியூ) இடங்கள் உண்மையில் மாநிலங்களுக்கு உரிய இடங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் செயல்படுத்துவதற்கு உரியதாகும். அவற்றை அவர்கள் செயல்படுத்தலாம்.

சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கிய தீர்ப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான தடையும் இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் இந்தக் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருப்பதால் இந்தக் கல்வி ஆண்டுக்கான இடஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை முடிவு செய்வதற்கான பொறுப்பை ஒன்றிய அரசிடம் விட்டுவிட்டது. ஒன்றிய அரசு இப்போது 27 சதவிகித இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முடிவு செய்துவிட்டது. ஆனால் அவ்வாறு முடிவு செய்வதை தாமதப்படுத்துவது "வக்கிரகுணம்" என்று உயர்நீதிமன்றம் குறிப்பிடுவதற்கு முன்பாக அல்ல.

இவ்வாறு "தி இந்து" ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories