தமிழ்நாடு

டிப் டாப் உடையில் ‘போலி’ போலிஸ்... உதவி கமிஷனராக வலம் வந்த நபர்: நிஜ போலிஸிடம் சிக்கியது எப்படி?

போலிஸ் அதிகாரி எனக் கூறி போலியாக வலம் வந்தவரை போலிஸார் கைது செய்தனர்.

டிப் டாப் உடையில் ‘போலி’ போலிஸ்... உதவி கமிஷனராக வலம் வந்த நபர்: நிஜ போலிஸிடம் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சாலையில் போலிஸார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சைரன் பொருத்திய போலிஸ் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

அப்போது, போலிஸார் பதற்றமடைந்து உயரதிகாரி யாரோ ஒருவர் வருவதாக நினைத்துள்ளனர். பின்னர் கார் அருகே வந்தபோது, ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் காரில் இல்லை.

இதையடுத்து அந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில், தன்னை உதவி கமிஷனர் எனக் கூறி அடையாள அட்டை காண்பித்துள்ளார். பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் என்பதும், போலிஸ் உதவி கமிஷனர் எனக் கூறி வலம் வந்ததும் போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரிடமிருந்த போலி அடையாள அட்டை, துப்பாக்கி, கார் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலிஸ் அதிகாரி எனக் கூறி ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories