தமிழ்நாடு

கடந்த 3 ஆண்டுகளில் 230 அரசியல் கொலைகள்... ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கடந்த 3 ஆண்டுகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் 230 அரசியல் கொலைகள்... ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 230 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு, நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதில் அளித்தார்.

நித்யானந்த் ராய் அளித்த பதிலில், “அரசியல் காரணத்திற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் 99 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு 59 பேரும், 2019ஆம் ஆண்டு 72 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 230 அரசியல் கொலைகள்... ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 49 பேரும், மேற்கு வங்கத்தில் 27 பேரும், பீகாரில் 26 பேரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகத்தில் 24 பேரும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories