தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல் : வாலிபர் போக்சோவில் கைது!

வேலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல் : வாலிபர் போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே பாத்திரம் கழுவிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளங்கோவன் என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த சிறுமி சத்தம் போட்டு அலறியுள்ளார். மகளின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சிறுமியின் தந்தை வெளியே வந்துள்ளார். அப்போது சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அங்கு நின்றிருந்த இளங்கோவை தட்டுக்கேட்டுள்ளார்.

அப்போது இளங்கோவன் சிறுமியின் தந்தையைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் இளங்கோவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் இளங்கோவன் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories