தமிழ்நாடு

“வந்தா எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?” : கோவை ஆட்சியரை மிரட்டிய அதிமுக MLAக்கள் மீது திமுகவினர் புகார்!

கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தி.மு.வினர் புகார் அளித்துள்ளனர்.

“வந்தா எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?” : கோவை ஆட்சியரை மிரட்டிய அதிமுக MLAக்கள் மீது திமுகவினர் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நேற்று முன் தினம் ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தனர்.

அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அளித்த மனுவை கோவை ஆட்சியர் சமீரன் அமர்ந்தபடியே வாங்கியுள்ளார். இதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, “எம்.எல்.ஏ. வந்தா, எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?” என வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம், “எதற்கு எழுந்து நிற்க வேண்டும்?” என கேள்வி எழுப்பிதால், “என்ன இப்படியெல்லாம் பண்றீங்க.. இதெல்லாம் நல்லா இல்ல” என ஆட்சியரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எகிறியுள்ளனர். தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும் கூச்சலிட்டுள்ளனர்.

“வந்தா எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?” : கோவை ஆட்சியரை மிரட்டிய அதிமுக MLAக்கள் மீது திமுகவினர் புகார்!

இருக்கையில் அமர்ந்தபடி மனு பெற்றது ஒரு குற்றமா என எண்ணிய மாவட்ட ஆட்சியர் சமீரனும் வீண் பரபரப்பை தவிர்க்க எண்ணி எழுந்து நின்று மனுவைப் பெற்றார். மாவட்ட ஆட்சியரை அச்சுறுத்தும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்டதால் ஆட்சியர் அறையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சூலூர் காவல் நிலையத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் தி.மு.வினர் புகார் அளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories