தமிழ்நாடு

“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்!

மாவட்ட ஆட்சியரை அச்சுறுத்தும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்டதால் ஆட்சியர் அறையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாவட்ட ஆட்சியரோடு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வந்தனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அளித்த மனுவை கோவை ஆட்சியர் சமீரன் அமர்ந்தபடியே வாங்கியுள்ளார். இதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“என்ன இப்படியெல்லாம் பண்றீங்க.. இதெல்லாம் நல்லா இல்ல” என ஆட்சியரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எகிறியுள்ளனர். தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும் கூச்சலிட்டுள்ளனர்.

இருக்கையில் அமர்ந்தபடி மனு பெற்றது ஒரு குற்றமா என எண்ணிய மாவட்ட ஆட்சியர் சமீரனும் வீண் பரபரப்பை தவிர்க்க எண்ணி எழுந்து நின்று மனுவைப் பெற்றார்.

மாவட்ட ஆட்சியரை அச்சுறுத்தும் வகையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடந்துகொண்டதால் ஆட்சியர் அறையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

banner

Related Stories

Related Stories