தமிழ்நாடு

வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனையை மூட்டி விடுகிறதா பா.ஜ.க? : மேகாலயா அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அசாம் மாநிலத்துடன் மேகாலயாவும் தனது மோதல் போக்கை தொடர்ந்துள்ள நிலையில் பா.ஜ.க அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனையை மூட்டி விடுகிறதா பா.ஜ.க? : மேகாலயா அமைச்சர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

.வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இதில் அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகியவை எல்லைப் பகுதிகளைப் பிரிக்கின்றன.

எல்லை தொடர்பான சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் கடந்த 26-ம் தேதி வன்முறை வெடித்தது.

இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலிஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி மோதிக்கொண்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனையை மூட்டி விடுகிறதா பா.ஜ.க? : மேகாலயா அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, உள்துறை அமித்ஷா தொலைபேசியில் இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பா.ஜ.க ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தல் இல்லாமல் அம்மாநில முதல்வர் தனிச்சையாக எப்படி பேசியிருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமல்லாது அசாமில் ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்சனையை தீர்த்து வைப்பதாக பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இருமாநில போலிஸார் எல்லை பிரச்சனையில் மோதியதில் உயிரிழப்பு நிகழந்துள்ளது. பா.ஜ.கவால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை.

மேலும் இருமாநில அரசுகளும் பிரச்சனையை வளர்த்துக்கொள்ளும் போக்கையும் விடுவதாக இல்லை. அதேபோல், திரிபுரா மற்றும் மணிப்பூரை தவிர பிற வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அசாமுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்சினையில் நீடிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனையை மூட்டி விடுகிறதா பா.ஜ.க? : மேகாலயா அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அந்தவகையில், அசாம் மாநிலத்துடன் மேகாலயாவும் தனது மோதல் போக்கை தொடர்ந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு மாநிலத்திலும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியே ஆட்சி செய்து வருகின்றது.

ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக சுமுக தீர்வு காணும் ஏற்பாட்டை பா.ஜ.க முன்னெடுக்காமல் செயல்படுகின்றது. அதுமட்டுமல்லாது, இருமாநில உறவுகளையும் பகைமையை ஏற்படுத்தும் வேலையும் பா.ஜ.க செய்து வருகின்றது. குறிப்பாக அசாம் மாநிலம் பற்றி மேகாலயா பா.ஜ.க அமைச்சரின் பேச்சு மீண்டும் இருமாநில மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சன்போர் சுலாய், நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பியதை உண்பதற்கு உரிமை இருக்கிறது. மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதைவிட மாட்டிறைச்சியைச் சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன். மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பா.ஜ.க தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனையை மூட்டி விடுகிறதா பா.ஜ.க? : மேகாலயா அமைச்சர் சர்ச்சை பேச்சு!

மேகாலயா, அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம். அசாம் மக்கள் எங்கள் எல்லையில் உள்ள மக்களைத் தொந்தரவு செய்தால், திர்வினையாற்றும் நேரமும் வரும். இப்படிப் பேசுவதால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் இல்லை.

நம்முடைய மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எதிரிகள் நம்முடைய வீட்டைத் தாக்கினால், உங்களுடைய மனைவி, மகள், குழந்தைகளைத் தாக்கினால், சுய பாதுகாப்புக்கு நீங்களும் அவர்களைத் தாக்கலாம். அப்படித்தான் நாங்கள் எங்கள் எல்லையில் அசாம் போலிஸாருடன் மோதினோம்.

எதிரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடிக்கவோ, திருடவோ வந்தால், உங்கள் வீட்டை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அது சட்டரீதியாகவோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories