தமிழ்நாடு

”தொழில்துறையில் தெற்காசியாவின் முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்கும்” - திமுக அரசுக்கு India Ahead பாராட்டு!

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ குறித்து வணக்கம் தமிழ்நாடு என ‘இந்தியா அஹெட்’ எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி, சிறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளது.

”தொழில்துறையில் தெற்காசியாவின் முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்கும்” - திமுக அரசுக்கு India Ahead பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மு.க.ஸ்டாலின் அவர்களின் கழக அரசு தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆங்கிலத் தொலைக்காட்சியான "இந்தியா அஹெட்’’ பாராட்டுத் தெரிவித்து "தொழில் துறையில் தமிழகம் தெற்காசியாவின் முன்மாதிரியாகத் திகழும்’’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.

இதுபற்றிய செய்தி வருமாறு:-

கடந்த வாரம் சென்னை- கிண்டியில் தமிழக அரசு நடத்திய ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி தொழிலதிபர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த விழாவைக் குறித்து ‘இந்தியா அஹெட்’ எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி, ‘வணக்கம் தமிழ்நாடு’ - தமிழகத்தைத் தெற்காசியாவின் சிறந்த முதலீட்டுக்களமாக மாற்ற விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டம் நிறைவேறுமா?' என்கிற பொருளில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

ரூ. 28,508 கோடி முதலீட்டிற்கான 49 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன என்பதைத் தொலைக்காட்சி எடுத்துரைத்தது. இதன் மூலம் 83,482 பேருக்குவேலை வாய்ப்புகள் உருவாகும்.

ஐ.ஐ.டி. தொழில்முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இப்போது இந்தியாவில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழகத்தை விரைவில் தெற்காசியாவிலேயே சிறந்த பகுதியாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு’ , என்று பேசியதை அந்தத் தொலைக்காட்சி மிகுந்த பாராட்டுணர்வுடன் குறிப்பிட்டது. அந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்களின் நேர்காணலும் இடம்பெற்றது. ஆர்.கணபதி, திரிக்யூ டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தின் தலைவர். மேலும் ஐ.ஐ.டி. தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

இவர் தமிழக அரசின் முன்னெடுப்புகளை வியந்து பாராட்டினார். "தமிழகம் தொழிற்கல்வியிலும் உள்கட்டமைப்பிலும் சமூக சமத்துவத்திலும் சிறந்து விளங்கும் மாநிலம். 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு

உற்பத்தி கொண்ட பொருளாதாரமாகத் தமிழ் நாட்டை உருவாக்குவதுதான் தமது அரசின் இலக்கு என்று தமிழக முதல்வர் பேசினார். ஆனால் செயலூக்கம் மிக்க இந்த அரசு, 2030ஆம் ஆண்டிற்கு முன்பே இதைச் சாதிக்கும்' - என்று நம்பிக்கை தெரிவித்தார் ஆர். கணபதி.

மேலும் பேசுகையில், ‘புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல கோடி ரூபாய் மானியம் வழங்க முன் வந்திருக்கிறது. இது முன்னுதாரணம் இல்லாதது’ என்று பாராட்டினார் ஆர்.கணபதி. ‘தமிழகம் உற்பத்தியில் தனது இலக்கை அடைய அதன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அதற்கான சூழலை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது. தமிழக முதல்வர் தொடங்கி வைத்திருக்கும் ஒற்றைச் சாளரமுறை, தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதிகளை சென்னைத் துறைமுகம் வாயிலாகவும், வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதிகளை கொச்சி துறைமுகத்தின் வாயிலாகவும் மேற்கொள்ள முடியும்’ என்றும் கருத்துரைத்தார் ஆர்.கணபதி.

டி.சி.எஸ். நிறுவனத்தின்செயல் தலைவர் பாராட்டு!

டி.சி.எஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் கணபதி சுப்பிரமணியம், தனது நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 92,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருப்பதாகவும், வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பம் தமிழகத்தில் பல்கிப் பெருகப்போவதைத் தன்னால் உணர முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவோடு இருக்கிறார்!

தொடர்ந்து பேசுகையில், "அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் தொழில்துறை முன்னேற வேண்டிய திசைவழியைக் குறித்த தெளிவோடு இருக்கிறார். தொழில்துறைச் செயலாளர் நா.முருகானந்தம், எங்கள் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்கிறார். முதலீட்டாளர்களுக்கான ஒரு வழிகாட்டுக் குழுவையும் அவர் அமைத்திருக்கிறார். அவர்கள் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யச் சித்தமாக இருக்கிறார்கள், என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்"" என்றார் டி.சி.எஸ்-இன் கணபதி சுப்பிரமணியன் .

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இந்தியாஅஹெட் தொலைக்காட்சி நிறுவனம்,‘தொழில் துறையில் தமிழகம் தெற்காசியாவின் முன் மாதிரியாக விளங்கும் காலம்வெகு விரைவில் வரும்’ என்று கூறியது.

banner

Related Stories

Related Stories