தமிழ்நாடு

“குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட காதல் ஜோடி.. தட்டிக்கேட்ட கவலாளிக்கு மண்டை உடைப்பு” : போலிஸ் விசாரணை!

குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியின் மண்டையை உடைத்த காதலர்களை போலிஸார் கைது செய்தனர்.

“குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட  காதல் ஜோடி.. தட்டிக்கேட்ட  கவலாளிக்கு மண்டை உடைப்பு”  : போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த ஆவடி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் புருசேஷாத்தமன். இவர் சேக்காடு கிராமத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அந்த குடியிருப்பில் வசிக்கும் இளம் பெண்ணின் நண்பர்கள் குடித்து விட்டு வளாகத்துக்குள் வந்தாக கூறிப்படுகிறது.

அப்போது புருஷோத்தமன் இவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்டுள்ளார். இதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத இளைஞர்கள் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்களுக்கும் காவலாளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டதில் தகராறு முற்றியதில் அங்கிருந்த இரும்பு பைப்பை கொண்டு அவரின் தலையில் பலமாக அடித்துள்ளது. இதில் புருஷோத்தமன் ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்துள்ளார். இனைப் பார்த்த மற்ற குடியிருப்பு வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் லட்சுமி பிரியா மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். போலிஸார் விசாரணையில் அவர்கள் இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் காவலாளியைத் தாக்கும் போது உடனிருந்த மற்ற இரண்டு நண்பர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories