தமிழ்நாடு

யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? : சாலையில் நடந்த கோர விபத்தில் நடந்தது என்ன - வாக்குமூலம் வாங்கிய போலிஸார்

அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்த போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? : சாலையில் நடந்த கோர விபத்தில் நடந்தது என்ன - வாக்குமூலம் வாங்கிய போலிஸார்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டி முடிந்து 3 நண்பர்களுடன் காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக காரை ஓட்டியதால் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

காரில் பயணித்த பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை யாஷிகா, மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி-28. என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாஷிகா ஆனந்த் விரைவில் கைது? : சாலையில் நடந்த கோர விபத்தில் நடந்தது என்ன - வாக்குமூலம் வாங்கிய போலிஸார்

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிந்துள்ளதாகவும், வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சில நாட்களில் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சுயநினைவு வந்தவுடன்அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்திடம் போலிஸார் விசாரணை நடத்தினார். அப்போது பேசிய நடிகை யாஷிகா, விபத்து நடந்த அன்று நான் மது அருந்தவில்லை. காரை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்தேன். அதனால் தடுப்புச் சுவரில் மோதி கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

காரின் முன் இருக்கையில் என்னுடன் அமர்ந்திருந்த பவானி சீல் பெல்ட் அணியவில்லை. ஆதனால் அவர் தூக்கி வீசப்பட்டார் என பல்வேறு தகவலை போலிஸாரிடன் நடிகை யாஷிகா வாக்குமுலமாக அளித்துள்ளார். இதனிடையே நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்த போலிஸார் விரைவில் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories