தமிழ்நாடு

கீழடி வார்த்தையைக் கேட்டாலே ‘அவர்களுக்கு’ எரிகிறது : துக்ளக் பதிவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சாட்டையடி

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை விமர்சித்திருந்த துக்ளக் பத்திரிகைக்கு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

கீழடி வார்த்தையைக் கேட்டாலே ‘அவர்களுக்கு’ எரிகிறது : துக்ளக் பதிவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சாட்டையடி
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வு பணிகளால் கொரோனாவால் வாடும் மக்களின் வாழ்வு மீண்டு விடுமா? எலும்புக் கூடுகளாலும், கலங்களாலும் மக்களின் பசி தீர்ந்துவிடுமா என வாய்க்கு வந்தபடியெல்லாம் துக்ளக் பத்திரிகை விமர்சித்திருக்கிறது.

இந்த பதிவுகளுக்கு தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் கட்சியினர்கள் என பல தரப்பினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இப்படி இருக்கையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு அகழாய்வு பணிகள் குறித்து துக்ளக் பத்திரிகையின் விமர்சனத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:

தொல்பொருள் ஆய்வுகளால் எந்த பயனும் இல்லை. அகழாய்வுகளை செய்வதனால் கொரோனாவை விரட்டிட முடியுமா என்பது குறித்து கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கடலுக்குள் இருக்கும் துவாரகையை மீட்கிறோம், குஜராத்தில் அகழாய்வு செய்கிறோம் எனச் சொல்லி எக்கச்சக்கமாக ஒன்றிய பாஜக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் பசியும் ஏழ்மையும் வறுமையும் தீர்ந்துவிட்டதா? கொரோனா வைரஸ்தான் ஒழிந்துவிட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ச்சியாக, கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகள் மேற்கொண்ட போது அதனை இந்தியாவின் (பாரத) பண்பாடு என்றெல்லாம் உச்சிமுகர்ந்தவர்கள் தற்போது தமிழ் மற்றும் தமிழரின் பண்பாடு என்றுக் கூறுவதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் எலும்புக்கூடு கிடைக்கிறது என பொறுமித்தள்ளுகிறார்கள்.

பாரத பண்பாடு என்றுக் கூறினால் இனிக்கிறது. தமிழர் பண்பாடு என்றால் கசக்கிறதா? அசோகர் காலத்துக்கு பிறகே தமிழுக்கும் தமிழருக்கும் நாகரிகம் வந்தது என்றும், அதுவரை வேத நாகரிகம்தான் என்று நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடந்துவிடாது.

ஏனெனில் அவர்களின் கூப்பாடுகளை மறுக்கும் வகையில் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தும் தொடர்ந்து கிடைக்கப்பெற்றும் வருகின்றன. இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாமலும் அதனை மறுக்க முடியாத விரக்தியாலும் விமர்சனங்களை அள்ளித் தெளிக்கிறார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories