தமிழ்நாடு

கொரோனா பரவல் இல்லாத மாவட்டங்கள் எவை? அரசிதழில் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மேலும் 5 மாவட்டங்கள் மாறியுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் இல்லாத மாவட்டங்கள் எவை? அரசிதழில் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

கொரோனா பரவல் இல்லாத மாவட்டங்கள் எவை? அரசிதழில் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
கொரோனா பரவல் இல்லாத மாவட்டங்கள் எவை? அரசிதழில் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

கடந்த ஜூலை 9ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும், அதேப்போல், குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories