தமிழ்நாடு

“ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்” : மதுரை இறைச்சிக் கடையின் அதிரடி ஆடி ஆஃபர்!

மதுரையில் ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்” : மதுரை இறைச்சிக் கடையின் அதிரடி ஆடி ஆஃபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் கடந்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இறைச்சிக் கடை ஒன்றில் ஒரு கிலோ கறி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மீன் மார்க்கெட் அருகே உள்ளது மகிழ் ஒரிஜினல் நாட்டு வெள்ளாட்டான் கிடா மற்றும் வான்கோழி கறிக்கடை. இந்தக் கடையில்தான் இப்படியான ஒரு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்தான விளம்பர போஸ்டரும் திருமங்கலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

“ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்” : மதுரை இறைச்சிக் கடையின் அதிரடி ஆடி ஆஃபர்!

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சந்திரன், "மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஆடி மாத அதிரடி ஆபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறோம். ஆடி மாதம் முழுவதும் இந்த ஆஃபர் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்த இறைச்சிக் கடையில் இங்கு ஆடு, நாட்டுகோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி என பல ரகங்களில் இறைச்சிகள் விற்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை துவங்கும்போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஆறு முட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories