தமிழ்நாடு

கூவம் ஆற்றில் குதித்த வாலிபர்... உயிரைக் காப்பாற்றிய போலிஸ் : என்ன நடந்தது?

கூவம் ஆற்றில் குதித்த வாலிபரை போலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கூவம் ஆற்றில் குதித்த வாலிபர்... உயிரைக் காப்பாற்றிய போலிஸ் : என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென பாலத்தின் சுவர் மீது ஏறி கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் கூவம் ஆற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். பிறகு அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் கூவம் ஆற்றில் குதித்தது ராயபுரம் தம்புசெட்டி வேலன் தெரு பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பது தெரியவந்து.

கமலக்கண்ணனுக்கு வயிற்றுப் பகுதியில் பெரிய கட்டி ஒன்று உள்ளது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் கமலக்கண்ணன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்றது குறித்து உடனடியாக தகவல் அளித்தவர்களுக்கும், விரைந்து வந்து காப்பாற்றிய போலிஸாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories