தமிழ்நாடு

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உட்பட 14 பேர் மீட்பு.. மறுவாழ்வளித்த விருதுநகர் கலெக்டர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உட்பட 14 பேர் மீட்டுள்ளனர்.

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உட்பட 14 பேர் மீட்பு.. மறுவாழ்வளித்த விருதுநகர் கலெக்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வட மாநில மக்கள் இன்றளவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். குறிப்பாக இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே சுருக்கியுள்ளது. உலகில் எந்த பகுதியில் உள்ளவரையும் எளிதில் தொடர்புக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.

ஆனால், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்பட்டுவதை தடுக்க முடியவில்லை; கொத்தடிமையாக்கப்பட்டு துயரத்தில் உழல்கிற மனிதர்கள் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்துக் கடந்துவிடுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தொடர்ந்து கொத்தடிமை முறையில் சிக்கிக்கொள்ள என்ன காரணம்; அதனைத் தடுக்க என்ன வழி என்ற விரிவான விவாதம் நமது சூழலில் இதுவரை உருவாகவில்லை.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவர் பாலித்தீன் பை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணிபுரிய வட மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மூலமாக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொத்தடிமைகளாக இருந்த 3 பெண்கள் உட்பட 14 பேர் மீட்பு.. மறுவாழ்வளித்த விருதுநகர் கலெக்டர்!

இந்நிலையில், நவீன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்காமல் இருந்ததாகவும், மேலும் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இவர்களது நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆட்சியர் உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் தலைமையில் பாலித்தின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவன உரிமையாளர் ஊதியம் வழங்கியதும் ஊதியத்தை அவர்களிடம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 14 முதல் 20 வயது வரை கொண்ட 3 பெண்கள் உட்பட 14 பேரை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சார் ஆட்சியர் தெரிவித்தார். இவர்களை கொத்தடிமைகளாக நடத்திய நவீன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    banner

    Related Stories

    Related Stories