தமிழ்நாடு

துப்புக்கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது : பெற்றோர் தலைமறைவு!

16 வயது சிறுமியை, உறவினருக்கு கட்டாயத் திருமணம் செய்த இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

துப்புக்கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. 16 வயது சிறுமியை  திருமணம் செய்த இளைஞர் கைது : பெற்றோர் தலைமறைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்த 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் கடந்த மே மாதம் ஆந்திராவில் உள்ள வாய் பேச முடியாத 24 வயதுடைய அகிலகுண்ட ரமேஷ் என்ற அவர்களது உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு மாதங்கள் கழித்து சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்த பெற்றோர் சிறுமிக்கு திருமணம் செய்ததால் அக்கம் க்கத்தினர்க்கு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சென்னை மாவட்ட சமூக நல அமைப்பினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது, 16 வயது சிறுமியை கடந்த மே மாதம் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று உறவினர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை மீட்டு திருமணம் செய்த 24 வயது அகிலகுண்ட ரமேஷை கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் சிறுமியின் பெற்றோரை திருவொற்றியூர் போலிஸார் தேடி வருகின்றனர்

banner

Related Stories

Related Stories