தமிழ்நாடு

"அரசிடம் கோரிக்கை வைத்தால் விடுப்பு வழங்கப்படும்": சிறையில் நளினியிடம் தெரிவித்த அமைச்சர் ரகுபதி!

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

"அரசிடம் கோரிக்கை வைத்தால் விடுப்பு வழங்கப்படும்": சிறையில் நளினியிடம் தெரிவித்த அமைச்சர் ரகுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மத்தியச் சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறை ஆகியவை குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், பெண்கள் சிறையில் ஆய்வு செய்த போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டை பெற்று வரும் நளினியை அமைச்சர் ரகுபதி சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி," தமிழ்நாட்டில் உள்ள சிறைச் சாலைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மத்தியச் சிறையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி மற்றும் சாந்தன் ஆகியோரை சந்தித்தேன். அப்போது அவர்கள் நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

"அரசிடம் கோரிக்கை வைத்தால் விடுப்பு வழங்கப்படும்": சிறையில் நளினியிடம் தெரிவித்த அமைச்சர் ரகுபதி!

இதற்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் விடுப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தேன்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறைக் கைதிகளால் தொரப்பாடி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிளைச் சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டும். உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories