தமிழ்நாடு

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்; 1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை - புள்ளிவிவரம் வெளியீடு!

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்; 1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை - புள்ளிவிவரம் வெளியீடு!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 281 பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் 11ம் தேதி தொடங்கியது.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்ததால் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேற்றி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதன்காரணமாக மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று வரை சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,768.

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்; 1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை - புள்ளிவிவரம் வெளியீடு!

அதில் 19,468 மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து 1,02,214 ஆக உள்ளது.

முன்னதாக, 2010-11ம் கல்வியாண்டில்தான் மாணவர்கள் எண்ணிக்கை 1,00,320 ஆக இருந்தது. மேலும், எதிர்வரும் நாட்களில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories