தமிழ்நாடு

சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !

மதுரையில் 42 இன்ஞ் சைஸ் உள்ள சட்டைகள் , ஜீன்ஸ் பேண்ட் உட்பட 3 லட்சம் மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை அண்ணாநகர் 3வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் சாரதி டெக்ஸ்டைல்ஸ் என்னும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு காலை கடையை திறக்க வரும்போது கடையின் கதவு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சைஸ் பார்த்து ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அபேஸ் செய்த நூதன திருடன் ; மதுரை துணிக்கடையில் கைவரிசை !
DELL

பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது 150 பட்டு சேலைகள், 68 நைட்டிகள், 42 இன்ஞ் 107 சட்டைகள், 38 இன்ஞ் ஜீன்ஸ் பேண்ட்கள், துண்டுகள், 95 சைஸ் பனியன்கள், உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

திருடு போன துணி வகைகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கோபிநாத் மதுரை அண்ணாநகர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories