தமிழ்நாடு

"NEET ரத்து நிகழவே நிகழாது என ஒன்றிய அமைச்சர் கூறாதது ஆறுதலாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

"NEET ரத்து நிகழவே நிகழாது என ஒன்றிய அமைச்சர் கூறாதது ஆறுதலாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் விலக்கு, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,

”ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். கிராமப்புற மாணவர்களின் பாதிப்பு, 13 மாணவர்கள் உயிரிழப்பு, ஏ.கே. ராஜன் குழு அறிக்கை ஆகியவற்றை எடுத்துக் கூறி வலியுறுத்தினோம்.

பின்னர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தபோது, 12 கோடி தடுப்பூசி தமிழகத்துக்கு தேவை. தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை என்பதை தெரிவித்து கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழ்நாடு சிறப்பாக தடுப்பூசி செலுத்தி வருவதாக கூறிய ஒன்றிய அமைச்சர் நிச்சயம் கூடுதல் தடுப்பூசி வழங்குவாதாகத் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை விரைந்து தொடங்க வேண்டும், கோவையிலும் புதிய எய்ம்ஸ் தொடங்க வேண்டும், புதிய 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தினோம். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை தொடங்க வலியுறுத்தினோம். இரண்டாம் அலை தேவை மற்றும் மூன்றாம் அலையை தடுக்க தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் 800 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களிடம் நீட் குறித்த குழப்பம் எதுவும் இல்லை. முதலமைச்சர் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டி முயற்சித்து வருகிறார். இந்த ஆண்டு நீட் தேர்வு நெருங்கிவிட்டதால் காலக்குறைவு காரணமாக விலக்கு கிடைக்காவிட்டாலும் அடுத்த ஆண்டு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு பெற தீவிர நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கல்வி அமைச்சரிடம் வலியுறுத்திய போது எந்த நிலையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என ஒன்றிய அமைச்சர் தெரிவிக்கவில்லை. அது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. 91 ஆயிரம் தடுப்பூசி இன்று காலையில் வந்தது, இன்று மாலை 6 லட்சம் தடுப்பூசி தமிழகத்துக்கு வந்துசேரும்.”

எனக் கூறியுள்ளார் மா.சுப்பிரமணியன்.

banner

Related Stories

Related Stories