தமிழ்நாடு

பதிவு செய்ய இடைத்தரகர்களை அணுக நிர்பந்தித்தால் புகார் அளித்திடுக - மக்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுரை!

மக்கள் மனது வைத்தால் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும் என பாத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திருப்பூரில் பொதுமக்களிடம் பேச்சு.

பதிவு செய்ய இடைத்தரகர்களை அணுக நிர்பந்தித்தால் புகார் அளித்திடுக - மக்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு இன்று மேற்கொண்டு வருகிறா. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.

தொடர்ந்து அலுவலகத்தில் அமைந்துள்ள மூன்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் சென்ற அவர் அங்கு பதிவுத்துறையை சாராத நபர்கள் உள்ளனரா என ஆய்வினை மேற்கொண்டார்.தொடர்ந்து துணை பாதிவாளர்களிடம், பத்திரங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்,மேலும் அவரகளை அதிக நேரம் காத்திருக்க வைக்ககூடாது என அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சரிடம், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுக்கொண்ட அமைச்சர், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், பத்திரங்களை பதிவு செய்ய வரும் மக்கள் தரகர்களை அணுகாமல் பதிவாளரை சந்தித்து பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் இடைத்தரகர்களை அணுக அதிகாரிகள் கூறினால், அதற்கென உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் கூறினார்.

banner

Related Stories

Related Stories