தமிழ்நாடு

“தமிழர் விரோத தினமலர்”: அவதூறு நாளிதழை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... இந்திய அளவில் ட்ரெண்டிங்!

பொய்ச்செய்திகளுக்குப் பெயர்போன தினமலருக்கு எதிராக ட்விட்டரில் ‘தமிழர் விரோத தினமலர்’ ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

“தமிழர் விரோத தினமலர்”: அவதூறு நாளிதழை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... இந்திய அளவில் ட்ரெண்டிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொய்ச்செய்திகளுக்குப் பெயர்போன தினமலருக்கு எதிராக ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ‘தமிழர் விரோத தினமலர்’ ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளையும், அவதூறுகளையும் செய்திகளாக வெளியிட்டு, ஊடக அறத்தை துச்சமென நினைத்து மக்களை ஏமாற்றி வருகிறது தினமலர் நாளிதழ்.

இந்துத்வ ஆதரவு நாளிதழான தினமலர், பா.ஜ.கவுக்கும், அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் விசுவாசமாக இருக்கும்பொருட்டு, தமிழர்களின் உணர்வைச் சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் கட்டளைப்படி செயல்படுவதகாக மட்டுமல்லாமல் பொதுவாகவே சிறுபான்மைச் சமுதாயத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையில் கற்பனையாகவோ, திரித்தோ பொய்ச்செய்திகளைத் தொடர்ந்து உருவாக்கிப் பரப்பி வருவதை நீண்டகால செயல்திட்ட அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது தினமலர்.

தினமலர் நாளிதழ், சிறுபான்மையினர் குறித்தும், தி.மு.க, கம்யூனிஸ்டுகள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் குறித்தும் தொடர்ந்து இதுபோன்று ‘பொய்ச்செய்தி’ தாக்குதல் நடத்திவருவது அதன் வாசகர்களும் கூட அறிந்த உண்மையே.

இந்நிலையில்தான், சமீபத்தில் தமிழ்நாட்டைத் துண்டாடும் நோக்கில் ஒரு செய்தியை வெளியிட்டது தினமலர். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டது.

அரசியல் ஆதாயத்திற்காகவும், தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் நோக்கிலும் இவ்வாறு செய்தி வெளியிட்ட தினமலருக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது வெளிநாட்டு காருக்கு வரி உள்நுழைவு வரி விலக்கு கேட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை திரித்து, நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக பொய்யான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.

“தமிழர் விரோத தினமலர்”: அவதூறு நாளிதழை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... இந்திய அளவில் ட்ரெண்டிங்!

நடிகர் விஜய் மீது பா.ஜ.கவினர் பலர் ஏற்கனவே பலமுறை திட்டமிட்டு அவதூறு தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது தினமலர், விஜய் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளது அவர்களது ரசிகர்களை வெகுண்டெழச் செய்துள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் இன்று ‘தமிழர் விரோத தினமலர்’ என்ற ஹேஷ்டேகில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories