தமிழ்நாடு

“100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த அ.தி.மு.க நிர்வாகி” : தானமாக வழங்கியவரின் மகன் புகார் !

அரசு பணிக்காக தானம் கொடுத்த இடத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன் பட்டா மாற்றி 100 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி மீது நிலத்தை தானமாக வழங்கியவர் மகன் புகார் மனு அளித்துள்ளார்.

“100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த அ.தி.மு.க நிர்வாகி” : தானமாக வழங்கியவரின் மகன் புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தினை சாலைப் பணிக்காக படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தானமாக பத்திரப்பதிவு செய்து அளித்துள்ளார்.

அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கடந்த 2007ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த ஈ.வி.பி பெருமாள்சாமி என்பவர் அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். மேலும், தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தானம் அளித்த இடத்தில் பெருமாள்சாமி திருமண மண்டபம் கட்டி தொழில் செய்து ஆண்டு அனுபவித்து வருகிறார்.

இதுகுறித்து நிலத்தை தானம் வழங்கிய ராமகிருஷ்ணனின் மகன் பழனி, பலமுறை அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நில மோசடி விவகாரம் குறித்து ராமகிருஷ்ணன் மகன் பழனி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரசு பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு தானம் அளித்த நிலத்தை அரசு அலுவலர்கள் உதவியுடன் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் ஈவிபி. பெருமாள் சாமி, பட்டா மாற்றி மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நில உரிமையாளர் மகன் பழனி தனது தந்தை அரசுக்கு தானம் கொடுத்த இடத்தை முறைகேடு செய்து அனுபவித்து வரும் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், அவரின் திருமண மண்டபத்தை அரசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தன்னை ஆள் வைத்து மிரட்டும் பெருமாள் சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புகார் மனுவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories