தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏகபோகமாக முறைகேடு செய்த அதிமுக; உரிய விசாரணை நடத்த நடவடிக்கை - திமுக MP தகவல்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏகபோகமாக முறைகேடு செய்த அதிமுக; உரிய விசாரணை நடத்த நடவடிக்கை - திமுக MP தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் எழில்மிகு மாநகரம் ( ஸ்மாட் சிட்டி ) திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 43 திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளில் சிலவற்றை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாநகராட்சி ஆணையாளர் உட்பட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி ஏரி தூர்வாரி சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, அங்கு உள்ள பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை பார்வையிட்டார்.

அப்போது அங்கு உள்ள கடைகளில் அதிமுகவினர் பேனர் வைத்து இருப்பதை கண்ட அவர், இந்த மார்க்கெட் பொதுவான இடம் என்றும் இங்கு கட்சி ரீதியான பேனர் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநகராட்சி நிர்ணயம் செய்த தொகை மட்டும் வசூல் செய்யப்படுகிறதா அல்லது கூடுதலாக வசூல் செய்யப்படுகிறதா என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கோட்டை பகுதியில் வணிக வளாகம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி தூர்வாரி சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். இந்த ஏரியானது சுற்றுலா தலமாக மாற்றிட மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் மக்களிடம் எந்த கருத்துருகளையும் பெறாமல் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணம் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், இந்த பணிகள் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதே போன்று ஏரிகளை தூர் வாரும் பணியில் அதிமுக பிரமுகர்கள் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும் சுமார் 2 கோடி மதிப்பிலான மண் கடத்தப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்மாட் சிட்டி திட்டத்தில் கீழ் நடைபெறும் பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories