தமிழ்நாடு

“மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு மணவிழாவை நடத்திவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” : மணமக்கள் நெகிழ்ச்சி!

திருக்குவளை செல்லும் வழியில் மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமணம் நடத்தி வைத்து சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு மணவிழாவை நடத்திவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” : மணமக்கள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருக்குவளை செல்லும் வழியில் மண்டப வாசலில் மணக்கோலத்தில் காத்திருந்த ஜோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமணம் நடத்தி வைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கிச் சென்றார். திருவாரூர் அருகே பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரைச் சேர்ந்த சோப்ரா - ரமா ஆகியோர் முதலமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

மணக்கோலத்தில் நின்ற ஜோடியைக் கண்டதும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்துப் பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். பின்னர் அவர்களுக்குத் திருமண வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்றார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். திருமண மண்டப வாசலில் முதலமைச்சர் தலைமையில் தங்களது திருமணம் நடந்ததால் புதுமண தம்பதியினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

banner

Related Stories

Related Stories