தமிழ்நாடு

தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு வீடு - ரூ.5 லட்சம் நிதியுதவியினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரனுக்கு அரசு சார்பில், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பிற்கான ஆணையினையும், 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்!

தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு வீடு - ரூ.5 லட்சம் நிதியுதவியினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் மகள் வழிப்பேரன் திரு.சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்கள்.

அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, இன்று (2.7.2021) தலைமைச் செயலகத்தில், திரு.எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களின் மகள் வழிப்பேரன் திரு.சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியினையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வழங்கினார்கள்.

banner

Related Stories

Related Stories