தமிழ்நாடு

500 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் e-bike தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் - அமைச்சர் தகவல்!

கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம் இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

500 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் e-bike தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் - அமைச்சர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகத்திலேயே இரண்டாம் மிக பெரிய எலக்ட்ரிக் மேட்டார் வாகன தொழிற்சாலை கிருஷ்ணகிரியில் வரும் டிசம்பர் மாதம் வாகன உற்பத்தி தொடங்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு முதலமைச்சரை நேற்று தலைமை செயலகத்தில் OLA electric Mobility நிறுவனத்தினர் சந்தித்த நிலையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம் இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.

ஆண்டுக்கு 1 கோடி மின் வாகனங்கள் உற்பத்தியாவதுடன், அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். திண்டிவனம், செய்யாறில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

கடலூரில் ஹெச்.பி.எல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது என்றார். பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் வரும் நாட்களில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் வர உள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories