தமிழ்நாடு

“அதிக விலை கொடுத்து ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்” : கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்!

கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைானதையடுத்து கோவாக்சின் ஒப்பந்தத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.

“அதிக விலை கொடுத்து ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்” :  கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்புசியை முதற்கட்டமாக 4 லட்சமாக இறக்குதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்திருந்தது.

ஆனால், ஃபைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துவிட்டதால் கொரோனா தடுப்பூசி வாங்கியதல் பிரேசில் அதிபர் ஜேர் போல்சொனோரோ ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்கட்சியின் குற்றம் சாட்டினார்கள்.

மேலும், அதிக விலை கொடுத்து பாரத் பயோடெக்கின் கோவாக்சினை கொள்முதல் செய்ய அவசியம் என்ன என்று நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பலரும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, பிரேசில் அரசுக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் கோவாக்சின் ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

“அதிக விலை கொடுத்து ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்” :  கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்!

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரேசில் நாட்டுக்கு கோவாக்சின் விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை. அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்பிரச்சனைகளுக்கு மத்தியில் இதுதொடர்பாக நிலைக்குழு விசாரணை நடத்தவேண்டும் என பிரேசில் எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. மேலும் கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைானதையடுத்து அதனை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவாக்சின் கரோனா தடுப்பு மருந்தை 324 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories