தமிழ்நாடு

பிறந்த குழந்தையை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பல் கைது: போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வந்தவாசி அருகே, ஐந்து மாத ஆண் குழந்தை விற்பனை செய்த பெற்றோர் உட்பட ஒன்பது பேரை போலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தையை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பல் கைது: போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகள் பவானி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் சரத்குமார் என்பவரும் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவானி கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்தால், வேறு ஒரு நபருக்குக் கொடுத்துவிட்டு, முறைப்படி நாம் இருவரும் திருணம் செய்து கொள்ளலாம் என்று சரத்குமார் பவானியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பிறகு, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக உறவினருக்கு குழந்தையை கொடுப்பதாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். மேலும், பவானியைத் திருமணம் செய்து கொள்ளாமல் சரத்குமார், திருப்போரூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சரத்குமார் குழந்தையை விற்பனை செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அவர் மீது வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் பவானி புகார் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலிஸார் வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை செய்தனர்.

பிறந்த குழந்தையை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பல் கைது: போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அப்போது சரத்குமார் வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையை சேர்ந்த ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மேலும் அவர்களிடம் போலிஸார் விசாரணையில் அந்த குழந்தையை அங்கிருந்து ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். பிறகு போலிஸார் பவானியின் கணவர் சரத்குமார் வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை ஈரோடு பகுதியைச் சேர்ந்த நந்தினி ஜானகி ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த ஐந்து பேரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது இவர்கள் 5 பேர் சென்னையில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை சென்ற போலிஸார் நான்கு பேரை மட்டும் கைது செய்து வந்தவாசி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது போலிஸார்அவர்களிடம் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் தாய் பவானியும் தந்தை சரத்குமாரும் சேர்ந்து குழந்தையை விற்பனை செய்தது முதலில் அம்பலமானது. மேலும் பல்வேறு இடங்களில் இந்த குழந்தை கைமாறி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

பிறந்த குழந்தையை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பல் கைது: போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இதையடுத்து குழந்தை விற்பனை செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, முனியம்மாள் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா ஆகிய நான்கு பெண்கள் உள்பட குழந்தையின் தாய் பவானி ஆகிய 5 பெண்களை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஐந்து மாத ஆண் குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை ஒப்படைத்தனர். வந்தவாசி அருகே தாய் தந்தை இருவரும் சேர்ந்து குழந்தையை விற்ற வழக்கில் தாய் தந்தை உள்பட ஒன்பது பேர் கைது செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories