தமிழ்நாடு

மதுரையில் 12 மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு; உரியவர்களிடமே ஒப்படைப்பு - அமைச்சர் PTR தகவல்!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகளிடமிருந்து பணத்தை திரும்ப பெறப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் 12 மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு; உரியவர்களிடமே ஒப்படைப்பு - அமைச்சர் PTR தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது,

திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த போது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது. அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சரி செய்து மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு , தற்போது இரண்டு செயல்பட்டு வந்துள்ளது. மதுரை மே 26 ஆம் தேதி 1166 பேருக்கு கொரோனா தற்போது 70 பேர் என தொற்று என குறைந்துள்ளது. பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் , கண்காணிக்கவும் மதுரை மாநகர் பகுதிகளில் பறக்கும்படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 12 மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு; உரியவர்களிடமே ஒப்படைப்பு - அமைச்சர் PTR தகவல்!

பெங்களூர் ஆய்வகத்தில் உள்ள டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனைக் கருவிகள் பற்றி கண்டறிந்து , அவற்றை வாங்கி தமிழகத்தில் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும் , தனி நபர்கள் அளித்த புகாரின்படி மதுரையில் உள்ள 12 தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று உரியவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மருத்துவமனை டீன் ரத்தினவேல் உட்பட பலரும் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories