தமிழ்நாடு

"டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்பு?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கிங் இன்ஸ்டிட்டியூட்டில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளுக்கான சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்பு?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மயிலை வேலு, பிரபாகர் ராஜா, எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டில் பெரியளவில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார்.

அதேபோல், அனைத்து வட்டார, மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றின் அளவு குறைந்துள்ளதால், டயாலிசிஸ், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சைக்கு கவனம் செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில், டெல்டா பிளஸ் வைரஸால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் பெங்களூருவில் பரிசோதிக்கப்பட்டன. அவர்களின் குடும்பத்தார் மற்றும் அருகே வசிப்பவர்கள், அவர்களின் உறவினர்களை பரிசோதித்து வருகிறோம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 9 பேரும் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் கொரோனா உச்சத்திலிருந்தபோதுதான் கொரோனா டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், டெல்டா பிளஸ் வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆய்வு தொடர்ந்து வருகிறது.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுமதி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த மையத்திற்கு உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடி ரூபாய் வரை செலவாகும். இதற்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த மையம் செயல்பாட்டிற்குவந்துவிடும். இந்த மையம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் பரிசோதனை மாதிரிகளை வெளிமாநிலத்திற்கு அனுப்ப வேண்டியிருக்காது. விரைவாகவும் முடிவுகள் கிடைக்கும்" என்றார்.

banner

Related Stories

Related Stories