தமிழ்நாடு

“பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ..” : அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்தடுத்து பதிலடி!

அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ..” : அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்தடுத்து பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதனை சரி செய்யும் பணியில் தி.மு.க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது படுவதால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மின் கம்பிகளில் ஏறி 2 மின் கம்பிகளும் உரசிக்கொள்வதால் மின்தடை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மின்தடை குறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியில் கருத்தை தவறாக சித்தரித்த அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதுதொடர்பாக பல்வேறு அவதூறுகளையும் தெரிவித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக உரிய ஆதாரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்தபோதும் உண்மையை ஏற்க மறுத்து தொடர்ந்து இந்த விவகாரங்களை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், வைகை ஆற்றின் நீர் ஆவியாவதைத் தடுப்பதற்காக தெர்மோகோல் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் விஞ்ஞானி என பெயர் எடுத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது.

பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ இதைப்பற்றி பி.தங்கமணியிடமோ உயர்நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்.” என உரிய படத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதில், “நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி விபத்து - மின்கம்பியை சீரமைக்கும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள். மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ-யை, இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

banner

Related Stories

Related Stories