தமிழ்நாடு

"தேர்தலுக்காக கொடுத்த பணத்தை திருடிட்டீங்க" : கொதித்தெழுந்த சி.டி.ரவி.. பீதியில் தமிழ்நாடு BJP தலைவர்கள்!

தேர்தலுக்காக நீங்கள் செய்த தில்லுமுல்லு எல்லாம் என்னிடம் ஆதாரத்துடன் இருக்கிறது என பா.ஜ.க தலைவர்களை சி.டி.ரவி வறுத்தெடுத்துள்ளார்.

"தேர்தலுக்காக கொடுத்த பணத்தை திருடிட்டீங்க" : கொதித்தெழுந்த சி.டி.ரவி.. பீதியில் தமிழ்நாடு BJP தலைவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க 20 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பா.ஜ.கவின் மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க தலைமையை தனது சொல்லுக்கு தலை ஆட்டும் பொம்மையாக மாற்றி, எப்படியாவது தமிழ்நாட்டில் கால்பதித்துவிட வேண்டும் என பா.ஜ.க கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியது. மேலும் 60 தொகுதிகள் வரை கேட்டு அடம் பிடித்தது. இதனால் என்ன செய்து என்று தெரியாமல் இருந்த அ.தி.மு.க பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தொகுதியில் கூட செல்வாக்கு இல்லாத பா.ஜ.கவுக்கு வேறு வழியில்லாமல் கடைசியாக 20 தொகுதிகளை ஒதுக்கியது.

மேலும், 20 தொகுதியில் பிரச்சாரம் செய்த பா.ஜ.க வேட்பாளர்களைப் பொதுமக்கள் கேள்விகளாகக் கேட்டு அவர்களைப் பிரச்சாரம் செய்ய விடாமல் வீட்டிலேயே முடக்கியதையும் நாம் பார்த்தோம். மேலும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்தனர். நீங்க வந்தா இருக்கும் பெயருக்கும் வேட்டு வந்திடும் என கூறி தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர்களை அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு அழைக்காமல் தவிர்த்த கூத்தும் நடந்தது.

பின்னர் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அண்மையில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், 'பா.ஜ.க மேலிடத்திலிருந்து தேர்தல் செலவுக்காக கருப்புப் பணம் அனுப்பப்பட்டது’ எனக் கூறியது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் செலவுக்குக் கட்சி கொடுத்த பெருந்தொகையை எச்.ராஜா செலவழிக்காமல் சுருட்டிக் கொண்டதாக, காரைக்குடி நகர பா.ஜ.க தலைவர் சந்திரன் என்பவரின் குற்றச்சாட்டு, எஸ்.வி.சேகர் கருத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

"தேர்தலுக்காக கொடுத்த பணத்தை திருடிட்டீங்க" : கொதித்தெழுந்த சி.டி.ரவி.. பீதியில் தமிழ்நாடு BJP தலைவர்கள்!

பா.ஜ.கவின் டெல்லி தலைமைக்கே தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்கள் பொய்யான தவல்களைக் கூறி ‘கல்தா’ கொடுத்த சம்பவம் தற்போது அம்லமாகியுள்ளது. இந்த உண்மை தெரிந்து கொதித்துப்போன, பா.ஜ.கவின் தேசிய செயலாளரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி, நாம் நம்முடைய பலத்தால் வெற்றிபெறவில்லை. அ.தி.மு.கவால் தான் வெற்றி வெற்றிபெற்றுள்ளோம் எனக் கூறி தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்களை வறுத்தெடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் பா.ஜ.கவின் தேசிய செயலாளரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தலைமையில் ஜூன் 19ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் தான் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர்களை கடுமையாக வசைபாடியுள்ளார்.

இந்த கூட்டத்தில் சி.டி.ரவி பேசுகையில், தேர்தலுக்கு முன்பு நீங்கள் என்ன சொன்னீர்கள்? 20 தொகுதிகள் நமக்கு போதாது. நம்மால் 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று சொன்னீர்கள். எனவே அதிக தொகுதிகளை வாங்கித்தர வேண்டும் என்றீர்கள்.

நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுத்தான் இறுதியாக 20 தொகுதிகளை வாங்கினோம். அப்போது கூட, அ.தி.மு.க., தரப்பில் என்ன சொன்னார்கள் தெரியுமா? அ.தி.மு.க., வாக்குகள் உங்களுக்கு சரியாக விழுந்தால் உங்களால் ஐந்து தொகுதிகளில் வரை வெல்ல முடியும், எனவே 10 தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.

"தேர்தலுக்காக கொடுத்த பணத்தை திருடிட்டீங்க" : கொதித்தெழுந்த சி.டி.ரவி.. பீதியில் தமிழ்நாடு BJP தலைவர்கள்!

ஆனால், அப்போது நாம், அவர்கள் மீது கோபப்பட்டோம். ஆனால் இன்று என்ன நடந்தது. அவர்கள் சொன்னது தானே நடந்தது. அதேபோல் எல்லா பூத் கமிட்டிக்கும், ஆட்களை நியமித்து விட்டோம் என்று சொன்னீர்கள். ஆனால், பல கமிட்டிகளுக்கு ஆட்களே நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்ட ஆட்களும் சரியாக வேலை செய்யவில்லை.

இதுகுறித்து நாங்கள் கேட்டால், இல்லை என்று சொல்வீர்கள். எல்லா விபரங்களும், என் கையில் ஆதாரத்துடன் உள்ளன. அதேபோல், வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளிலும் கூட, பல இடங்களில் பூத் கமிட்டிக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அப்படி இருந்தபோதும்,நாம் வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சியால்தான். நம்மால் அல்ல.

20 தொகுதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் நீங்கள் செய்த தில்லுமுல்லு அனைத்தையும், ஆதாரத்தோடு தலைமைக்கு வழங்கியுள்ளனர். நீங்கள் யாரும் எதையும் மறைக்க முடியாது. நான்கு தொகுதிகளின் நிலை இப்படி இருக்கும்போது, வெற்றி பெற்ற தொகுதிகளில் இருக்கும் மாவட்ட தலைவர்களுக்கு, இன்னோவா கார் சிறப்பு பரிசாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அங்கே இருக்கும் மாவட்ட தலைவர்கள் யாரும், சரியாக வேலை செய்யவில்லை என்பதுதான், எனக்கு கிடைத்திருக்கும் தகவல்.

தேர்தலை சந்திக்க பல கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அந்தப் பணமெல்லாம், தேர்தலுக்காக செலவழிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டனர். அது தொடர்பாகவும், முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதனால், இப்போதைக்கு யாருக்கும் கார் பரிசு எல்லாம் கொடுக்கவேண்டாம். விசாரணை முடிந்த பிறகு கார் கொடுப்பதை பார்த்துக்கொள்வோம்" எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சால் பா.ஜ.க தலைவர்கள் விழிபிதுங்கி யார் யாருக்கு வேட்டு வருமோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories