தமிழ்நாடு

“15 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான ONGC-யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு” : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“15 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான ONGC-யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு” : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதில், பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்துப் பேசினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரியலூரில் 10 எண்ணெய்க் கிணறுகளும், கடலூரில் 5 எண்ணெய் கிணறுகளும் அமைக்க புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பங்கள், ஜூன் 21ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

தஞ்சை, நாகை திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியில்லை. இந்த மாவட்டஙக்ளுக்கு வெளியே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும். அக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்க அனுமதியில்லை. இதுபோன்று மண் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு ஆய்வறிக்கை சமப்பிக்க குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories