தமிழ்நாடு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

துணை நடிகை பாலியல் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவின்கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். தலைமுறை வாகிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலிஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை ஒன்று மதுரைக்கு இருந்தது. அதற்குள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருநெல்வேலியில் தனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் தலைமறைவாகி விட்டார்.

அதனைத் தொடர்ந்து போலிஸார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் அதி தீவிரம் காட்டி அதன் காரணமாக அவர் திருநெல்வேலியிலிருந்து பிரவீன், இளங்கோ பரணி ஆகியோர் உதவியுடன் பெங்களூரிலுள்ள தனது நண்பர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கி இருந்துள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதன் பின்னர் அமைச்சருக்கு உதவிய பிரவீன் இளங்கோ ஆகிய இருவரையும் போலிஸார் பிடித்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை தனிப்படை போலிஸார் கைது செய்தனர். கைது செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அடையார் சிறப்பு தனிப்படை போலிஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதி கிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

விசாரணையின் பொழுது முதற்கட்டமாக 376 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது எனவும் மாற்று சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரியும் தெரிவித்துள்ள நிலையில், சாந்தினி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஊரிய விளக்கம் அளித்ததன் பேரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவலில் வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனை புழல் சிறைக்கு போலிஸார் கொண்டு செல்ல உள்ளனர்.

banner

Related Stories

Related Stories