தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பு... பேருந்துக்கு அனுமதி? : நாளை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு... பேருந்துக்கு அனுமதி? : நாளை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகளும், ஏனைய 27 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில் 21 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என கூறபடுகிறது.

குறிப்பாக, பொது போக்குவரத்துக்கு அனுமதி, சிறிய ஜவுளி கடைகளுக்கு அனுமதி, சிறிய வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories