தமிழ்நாடு

முதல்வரின் சீரிய முயற்சியால் 30 நாட்களில் ஆவின் பால் விற்பனை 4 லட்சம் லிட்டர் அதிகரிப்பு: அமைச்சர் நாசர்!

பால் விலை குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 30 நாட்களில் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் சீரிய முயற்சியால் 30 நாட்களில் ஆவின் பால் விற்பனை 4 லட்சம் லிட்டர் அதிகரிப்பு: அமைச்சர் நாசர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு ஆவின் பால் விற்பனை மற்றும் கொள்முதல் 30 நாட்களில் 4 லட்சம் லிட்டர் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் அமைந்துள்ள கால்நடை தீவன தொழிற்சாலை மற்றும் ஆவின் பாலகங்களை, பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர், “ஆவின் நிலையத்தில் பால் உற்பத்தி விநியோகம் குறித்தும், பால் விலை குறைக்கப்பட்ட பிறகு புதிய விலைக்குப் பால் விற்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆவின் பால் பூத்துகளில் ஆவின் தயாரிப்பு பொருட்களைத் தவிர்த்து வேறு நிறுவன பொருட்களை விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கி நிலுவைத் தொகைகள் விரைவில் வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி அத்தியாவசிய பொருட்களான பால் பால் பவுடர், தயிர் போன்றவை மக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மட்டும் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த ஆட்சி காலத்தில் 636 நபர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் பணி நியமன ஆணையை ரத்து செய்யப்பட்டு, வெளிப்படைத் தன்மையோடு புதியதாக ஆட்களைத் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories