தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 23வது நாளாக குறையும் கொரோனா தொற்று : இன்று ஒரேநாளில் 25,895 பேர் டிஸ்சார்ஜ்! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23வது நாளாக குறையும் கொரோனா தொற்று : இன்று ஒரேநாளில் 25,895 பேர் டிஸ்சார்ஜ்! #CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு 14 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இன்று 14,016 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,53,721 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,77,295 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,99,68,038 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று கோவை மாவட்டத்தில் 1895 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும்,கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை21,74,247 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,49,927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 267 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 80 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 187 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், கொரோனா உயிரிழப்பு 29,547 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories