தமிழ்நாடு

தடுப்பூசிதான் கொரோனாவை ஒழிக்க ஒரே வழி; தடுப்பூசி போட அனைவருக்கும் வலியுறுத்துங்கள் - உதயநிதி ஸ்டாலின் MLA

கொரானாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி என்பதால் அதனை தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசிதான் கொரோனாவை ஒழிக்க ஒரே வழி; தடுப்பூசி போட அனைவருக்கும் வலியுறுத்துங்கள் - உதயநிதி ஸ்டாலின் MLA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் திட்டத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி தான் குடும்பத்தினர், நண்பர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்துங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திரைத்துறையினர் பல கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோயில் இருந்து தப்பிக்க முடியும். கிராமப்புறங்களிலும் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை செய்து வருகிறோம். 21 ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி வர வர தமிழகம் முழுவதுமுள்ள மக்களுக்கு செலுத்தப்படும். சேப்பாக்கம் தொகுதியில் ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தொகுதியாக உருவெடுக்கும். திரைத்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது உலகத்திற்கான செய்தி என்றார்.

banner

Related Stories

Related Stories