தமிழ்நாடு

ஜூடோ பயிற்சிக்கு வந்த கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கில் ‘திடுக்’ தகவல்கள்!

தற்காப்புகலை பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூடோ பயிற்சிக்கு வந்த கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கில் ‘திடுக்’ தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா நகர் 11 வது பிரதான சாலையில் தனியார் தற்காப்புப் பயிற்சி அளித்து வந்தவர்தான் தற்காப்புக்கலை பயிற்சியாளரான ஜெபிராஜ். மேலும், இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளிலும் பகுதிநேர பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு கேரளாவில் இருந்து ஜூடோ போட்டிக்காக கெருகம்பாக்கம் தனியார் பள்ளிக்கு வந்த பெண்ணுக்கு தற்காப்புக்கலை பயிற்சியாளரான கெபிராஜுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் பள்ளிப் படிப்படை முடித்து சென்னை தனியார் கல்லூயிரில் சேர்ந்தவுடன் தனது ஜூடோ பயிற்சியை தொடர எண்ணியதால் தனக்கு ஏற்கனவே பழக்கமான தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜை அணுகியுள்ளார்.

தன்னிடம் ஜூடோ பயிற்சிபெற வந்த கேரளப் பெண்ணுக்கு தனது அண்ணா நகர் பயிற்சி மையத்தில் வைத்து பயிற்சியளித்து வந்துள்ளார் கெபிராஜ். இந்த சமயத்தில், ஜுடோ போட்டிக்காக நாமக்கல் மாவட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் பயிற்சியாளரான கெபிராஜுடன் அந்தப் பெண் போட்டிக்குச் சென்றுள்ளார்.

ஜூடோ பயிற்சிக்கு வந்த கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கில் ‘திடுக்’ தகவல்கள்!

போட்டி முடிந்து திரும்பி வரும் வழியில் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார் கெபிராஜ். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஒத்துழைக்க மறுக்கவே இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என கடுமையான குரலில் மிரட்டியதோடு, பலவந்தப்படுத்தி பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார் தற்காப்புக்கலை பயிற்சியாளரான கெபிராஜ்.

கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளின் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் தொடர்சியாக ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்து அது தொடர்பாக காவல்துறையினர் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புது உத்வேகம் பெற்ற அந்தப் பெண் தான் பாதிக்கப்பட்ட நிகழ்வையும் கூறி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கடந்த 29 ஆம் தேதி அளித்தார்.

அந்த புகாரின் மூலம் தற்காப்புக்கலை பயிற்சியாளரான கெபிராஜின் சில்மிஷங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடமிருந்த ஆதாரங்களையும் கைப்பற்றி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணையைத் துவங்கியபோது திடீரென்று தலைமறைவானார் கெபிராஜ்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜை தேடிப் பிடித்த காவல் துறையினர் அவர் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பாலியல் பலாத்கார முயற்சி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொந்தரவு செய்ததாக உண்மையை ஒத்துக்கொண்டார்.

ஜூடோ பயிற்சிக்கு வந்த கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கில் ‘திடுக்’ தகவல்கள்!

இதற்கிடையில் கெபிராஜின் நண்பர்களான தமிழ்நாடு ஜூடோ சங்க செயலாளர் சதீஷ் குமார், சினிமா துறையைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பிரேம் குமார் ஆகிய மூன்று பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பெண்ணிடம் கெபிராஜ் செய்த பாலியல் தொல்லை அவர்களுக்கு தெரிந்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி சாட்சியங்களோடு கொண்டுவரவுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், கெபிராஜ் பயிற்சியின்போது மாணவிகளிடம் எவ்வாறு நடந்துகொள்வார்? பயிற்சி காலத்தில் இதுபோன்று வேறு ஏதேனும் புகார்கள் மாணவிகளிடம் இருந்து வந்ததா உள்ளிட்ட பல கோண்ங்களில் காவல்துறையினர் விசாரணையை தவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜிடம் நேற்று இரவு தொடங்கிய விசாரணை விடிய விடிய நடைபெற்று அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், கெபிராஜ் மீதான புகார் உறுதியானதால் தற்காப்புக்கலை பயிற்சியாளரான கெபிராஜை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிபதியின் உத்தரவுப்படி 14 நாள் நீதிமன்ற காவலுக்காக கெபிராஜை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதிக்கு பரிந்துரை செய்த நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories