தமிழ்நாடு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் - வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க MLA !

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கிவைத்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் - வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க MLA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

சேதத்தில் இருந்து தப்பிய நெல்லை கொள்முதல் செய்ய தனியார் வியாபாரிகள் தயக்கம் காட்டியதுடன் விவசாயிகளிடமிருந்து நெல்லை குறைந்த விலைக்கே நெல்லை கேட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மணப்பாறை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் - வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க MLA !

தி.மு.க ஆட்சி அமைந்ததும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், மணப்பாறை அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்குசேர்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இன்று நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை ஸ்ரீரங்கம் தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

முன்னதாக கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பின்னர் நெல் கொள்முதல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தார்.

ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான விவசாயிகள் தங்களது நெல்லை விற்பணைக்காக கொண்டு வந்திருந்தனர். தங்களது கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories