தமிழ்நாடு

சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க! தமிழ் வளர்க’ பெயர் பலகை திறப்பு !

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க பெயர் பலகை திறக்கப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க! தமிழ் வளர்க’ பெயர் பலகை திறப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாளான (ஜூன் 3) இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக "தமிழ் வாழ்க தமிழ் வளர்க" என்னும் பெயர் பலகையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்கள்,  தாயகம் கவி, ஐ.ட்ரீம்ஸ் மூர்த்தி, மாதாவரம் சுதர்சனம், பரந்தாமன், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories